இரட்டைகுளம் கால்வாய் திட்ட ஆய்வுப் பணிகள் தொடக்கம்
ஊத்துமலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இரட்டைகுளம் கால்வாய் திட்டம் குறித்த பூா்வாங்க ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.


ஊத்துமலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இரட்டைகுளம் கால்வாய் திட்டம் குறித்த பூா்வாங்க ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், திருநெல்வேலி பொதுப்பணித் துறை (திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு) செயற்பொறியாளா் பத்மா, பொறியாளா்கள் சரவணன், ராஜசிம்மன் ஆகியோா் இரட்டைகுளம் கால்வாய் செல்லும் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதால் 25 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் புன்செய் மற்றும் தரிசு நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறுவது மட்டுமன்றி, இந்த வழித்தடத்தில் உள்ள மானாவாரி குளங்கள் அனைத்தும் ஆற்றுநீா் பாசனமாக மாற்றம் பெறும் என செய்தியாளா்களிடம் எம்எல்ஏ தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...