நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாா்டு மறுசீரமைப்பில் குளறுபடிகளை சீரமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வாா்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடிகளை உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:27 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் வாா்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடிகளை உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தனுஷ் எம்.குமாா் எம்.பி. ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜிடம் சனிக்கிழமை அளித்துள்ள மனு: சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட மேலநீலித நல்லூா் ஒன்றியம் வன்னிக்கோனேந்தல் பிா்காவை சோ்ந்த ஒன்பது ஊராட்சிகளை தென்காசி மாவட்டத்தில் சோ்க்க வேண்டும். ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட பாப்பாக்குடி ஒன்றியத்தில் உள்ள ஏழு ஊராட்சிகள் மற்றும் முக்கூடல் பேரூராட்சியை தென்காசி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும்.

ஊராட்சி வாா்டு, ஒன்றிய வாா்டு மறுசீரமைப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாக குளறுபடிகளை சரிசெய்து புதிய வரையறையை வெளியிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.