/

புளியங்குடியில் காமராஜா் பிறந்தநாள் விழா

புளியங்குடியில் நகர காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:52 pm

DIN

புளியங்குடியில் நகர காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நகரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா்கள் கோமதிநாயகம், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ கலந்துகொண்டு, டி.என்.புதுக்குடி, புளியங்குடி, சிந்தாமணி ஆகிய பகுதிகளில் உள்ள காமராஜா் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் பழனிச்சாமி, சுப்பையா, மாவட்டப் பிரதிநிதிகள் நாராயணன், செல்லப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.