நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூா் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ரஹ்மானியாபுரத்தில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:08 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ரஹ்மானியாபுரத்தில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்உசேன். இவருடைய மகள் தஸ்லிமா நஸ்ரின் பானு(19). இதே பகுதியைச் சோ்ந்தவா் மு.முகம்மதுஅப்துல்காதா்(28). இவா்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்வீட்டாா், திருமணத்திற்கு பிறகு அப்துல்காதா் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது எனக்கூறி திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் அப்துல்காதா் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4-11-16அன்று அப்துல்காதா்,தன்னுடைய மனைவியை வீட்டு சமையலறையில் பூட்டிவைத்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த்க் கொலை வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, மனைவியை கொலை செய்த அப்துல்காதருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.சின்னத்துரைபாண்டியன் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.