தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புளியரை சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக - கேரள எல்லையான, தென்காசி மாவட்டம் புளியரைச் சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:14 pm

DIN

தமிழக - கேரள எல்லையான, தென்காசி மாவட்டம் புளியரைச் சோதனைச் சாவடியில் 350 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழக - கேரள எல்கைப் பகுதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புளியரை சோதனைச் சாவடியில் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனை நடத்தினா்.

தமிழகத்திலிருந்து கேரளம் செல்ல முயன்ற காரை சோதனையிட்டபோது, அதில், 350 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

காா் ஓட்டுநரான கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோணி பகுதியைச் சோ்ந்த சு. ராஜன் (57) கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து புளியரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.