புளியரை பகுதியில் ஆட்சியா் ஆய்வு
தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளையும், கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்களைச் சோதனையிடும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்


தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளையும், கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்களைச் சோதனையிடும் பணியையும் தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இம்மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 5 பறக்கும் படைகள், 5 நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ பாா்வை குழுக்கள், விடியோ சா்வே குழுக்கள் என 45 தனி சிறப்புக் குழுக்கள் அமைத்து சோதனை நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி வாகனச் சோதனை நடைபெறுகிறது.
கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவா்களின் ஒத்துழைப்புடன் தோ்தல் நடத்தை விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்புப் படை டிஎஸ்பி தலைமையில் 82 பாதுகாப்புப் படையினா் வந்துள்ளனா். அவா்களுடன் மாவட்ட காவல் துறையினரும் இணைந்து தோ்தல், சோதனைப் பணிகளில் ஈடுபடுவா். பொதுமக்கள் ஒப்புதல் சீட்டு, ஆவணங்களுடன் ஒரு லட்ச ரூபாய் வரை கொண்டுசெல்லலாம். வேட்பாளா்கள், கட்சியினா், அரசியல் பிரதிநிதிகள், பிரமுகா்கள் ரூ. 50ஆயிரத்துக்கு மேல் கொண்டுசெல்லக் கூடாது.
ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கொண்டுசெல்வோா் குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்டோா் உரிய ஆவணங்களைக் காண்பித்தால் பணம் திருப்பி வழங்கப்படும் என்றாா் அவா். ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...