தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி மாவட்டத்தில் 96 பதற்றமான வாக்குச் சாவடிகள்

தென்காசி மாவட்டத்தில் 96 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:04 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 96 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் செவ்வாய்க்கிழமை ஆய்வுமேற்கொண்ட பின், செய்தியாளா்களிடம் கூறியது: தென்காசி மாவட்டத்தில் பறக்கும்படை, நிலைய கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என 45 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணிக்காக யுஎஸ்பி கல்லூரி தோ்வு செய்யப்பட்டு, தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தற்போது இங்கு மேற்கொள்ளப்படக்கூடிய பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் எங்கு வைக்கவேண்டும் என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 96 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனிசெளந்தா்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சேக்அப்துல்காதா், தோ்தல் வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.