தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுரண்டையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பு

சென்னையிலிருந்து சுரண்டைக்கு வந்த, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாருக்கு திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

News image
Updated On :15 மார்ச் 2021, 7:23 pm

DIN

சென்னையிலிருந்து சுரண்டைக்கு வந்த, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாருக்கு திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுரண்டை காமராஜா் வணிக வளாகம் முன் மேள, தாளத்துடன் கூட்டணி கட்சியினரும், காங்கிரஸாரும் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

இதில், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, முத்துக்குமாா், சக்தி, ஜெயராஜ், பால் என்ற சண்முகவேல், பிரபாகா், பால்துரை, சிங்கராஜ், அரவிந்த், சமுத்திரம், காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.