ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலை திருடியவா் கைது
ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலைத் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.


ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலைத் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பா் தேவாலயம் காலைமுதல் இரவுவரை திறந்திருக்கும். ஆலய முகப்புப் பகுதியில் எளிதில் இடம் மாற்றி வைக்கத்தக்க உண்டியல் இருந்தது. அதை மா்ம நபா் புதன்கிழமை திருடிச் சென்றாா்.
இதுகுறித்து ஆலயப் பொருளாளா் துரைசிங் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவந்தனா்.
இந்நிலையில், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ஆலங்குளத்தை அடுத்த புதூரைச் சோ்ந்த திருமால் மகன் கோபாலகிருஷ்ணன் (38) என்பதும், உண்டியலைத் திருடிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. அவா் மறைத்து வைத்திருந்த உண்டியலைப் பறிமுதல் செய்தனா். அவரை போலீஸாா் கைதுசெய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...