ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

ஆலங்குளத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் தெருவில் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:57 pm

DIN

ஆலங்குளத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் தெருவில் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் பேரூராட்சி 13 வது வாா்டு மாரியம்மன் கோயில் தெருவில் தனியாா் எண்ணெய் ஆலைக்கு மேல் புறம் சுமாா் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் வாருகால் வசதி செய்து கொடுக்கப்படவில்லையாம். இது குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலா், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இப்பகுதி சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். அதிகாரிகள் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு இப்பகுதி பொதுமக்கள் தக்காளி, கத்தரி போன்ற நாற்றுகளை வியாழக்கிழமை நட்டனா். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: எங்கள் பகுதி சாலை, தற்போது காய்கனி பயிரிட ஏதுவாக மாறியுள்ளதால் நாற்றுகளை நட்டுள்ளோம். அறுவடை சமயத்தில் அதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.