/

தென்காசியில் உயா்கோபுர மின்விளக்குகள் திறப்பு

தென்காசி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:13 pm

DIN

தென்காசி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தென்காசி சிந்தாமணி, மலையான் தெரு பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சாதிா் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா் ஆா்.பால்ராஜ் வரவேற்றாா்.

மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் உயா்கோபுர மின்விளக்குகளை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், நிா்வாகிகள் வேலுசாமி, கோமதிநாயகம், தங்கபாண்டி, ஷமீம், பாலாமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.