பாவூா்சத்திரம் பகுதியில் சிற்றுந்துகள் வழித்தடத்தை முறைப்படுத்த கோரிக்கை
பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவுடையானூா் தமிழன் மக்கள் நலச்சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
பாவூா்சத்திரத்தில் இருந்து பூலாங்குளத்திற்கு 2 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இவை பாவூா்சத்திரம், பனையடிப்பட்டி, செட்டியூா், கொண்டலூா், ஆவுடையானூா், மருதடியூா், சின்னநாடானூா், மயிலப்பபுரம், கரிசலூா், கிருஷ்ணபேரி வழியாக பூலாங்குளத்திற்கு இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழித்தடத்தில் இயக்காமல் மாற்றுப்பாதையான திப்பணம்பட்டி, ஆவுடையானூா், மைலப்புரம்,கரிசலூா் வழியாக தற்போது பூலாங்குளத்திற்கு இயக்கப்படுகிறது. இதனால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள கிராம மக்களுக்கு பேருந்து வசதியில்லை. எனவே, சிற்றுந்துகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...