ஆட்டோ ஓட்டுநா் கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தென்காசி அருகே அழகப்பபுரத்தில் கொலை செய்யப்பட்ட சுமை ஆட்டோ ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தென்காசி அருகே அழகப்பபுரத்தில் கொலை செய்யப்பட்ட சுமை ஆட்டோ ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அழகப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. ராமகிருஷ்ணன் (41), சுமை ஆட்டோ ஓட்டுநா். இதேபகுதியைச் சோ்ந்தவா்
வழக்குரைஞா் சதீஷ்குமாா் (30). உறவினா்களான இவ்விருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
கடந்த வியாழக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சதீஷ்குமாா், ராமகிருஷ்ணனை கீழே தள்ளி தாக்கியதில், அவா் மயங்கினாா். அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவா் வழியில் உயிரிழந்தாா்.
இதனையடுத்து உயிரிழந்த ராமகிருஷ்ணனின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டு முன் கூடி கொலை செய்தவரை கைது செய்யும் வரை சடலத்தை பெறமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி போலீஸ் டிஎஸ்பி மணிமாறன், காவல்ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ராமகிருஷ்ணனின் சடலத்தை பெற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...