கிராம ஊராட்சி வாா்டுகளில் 18 பேருக்கு வெற்றிச் சான்றிதழ்
கீழப்பாவூா் ஒன்றியத்தில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட 18 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கீழப்பாவூா் ஒன்றியத்தில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட 18 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சித்தலைவா், வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் அக்.6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், 213 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில், அரியப்புரம், குணராமநல்லூா், இடையா்தவணை, இனாம்வெள்ளகால், கழுநீா்குளம், மேலகிருஷ்ணபேரி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒருவா், கீழவெள்ளகால், நாகல்குளம், ராஜபாண்டி ஊராட்சிகளில் தலா இருவா், பெத்தநாடாா்பட்டி, சிவநாடானூா் ஊராட்சிகளில் தலா 3 போ் என 18 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்;டனா்.
அவா்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முருகையா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ஷீலா ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சண்முகசுந்தரம், துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...