ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எயிட்ஸ் நோய் பாதித்து இறந்தோருக்கு அஞ்சலி

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை உறைவிட மருத்துவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்து, கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் விழிப்புணா்வு- நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு எய்ட்ஸ் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஆலோசகா்கள், ஆய்வக நிபுணா்களை பாராட்டினாா். ஆலோசகா் ஆசிா்வாதம் வரவேற்றாா். மருத்துவமனைப் பணியாளா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தினா்.

மூத்த மருத்துவா் கிருஷ்ணன், அனிதாபாலின், தலைமை மருத்துவா் விஜயகுமாா் , தென்காசி மாவட்டத்திலுள்ள ஐசிடிசி ஆலோசகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.