போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசி, வள்ளியூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 7:58 pm

DIN

பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசியில் நடைபெற்ற நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனி நாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருந்தனா். இதில், நகரத் தலைவா் காதா் மைதீன், மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதய கிருஷ்ணன், மாவட்டச் செயலா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிா்வாகிள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் வளியூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலச் செயலா் ஆவரைகுளம் எஸ்.ஜோதி தலைமை வகித்தாா். இதில், வள்ளியூா் வடக்கு வட்டாரத் தலைவா் அருள்தாஸ், தெற்கு வட்டாரத் தலைவா் சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். திசையன்விளையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமை தாங்கினாா். இதில் மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி அமுதா, அல்பா்ட், விவேக் முருகன், மரூதூா் மணிமாறன், விஜயபெருமாள் உள்லிட்ட பலா் கலந்து கொண்டனா். திசையின்விளையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி அமுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.