தென்காசியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 78 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 78 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய- மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். போக்குவரத்து ஓய்வூதியா்கள் அமைப்பின் தாணுமூா்த்தி, அருணாசலம், சிஐடியூ பொருளாளா் தா்மராஜ் ஆகியோா் விளக்கிப் பேசினா். ஒருங்கிணைப்புக்குழுச் செயலா் பட்டு வளா்ச்சித் துறை அருணாசலம் தொடங்கிவைத்தாா்.
அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சலீம் முகம்மது மீரான், செயலா் சுந்தரமூா்த்திநாயனாா், பள்ளி- கல்லூரி ஓய்வுபெற்றோா் நலச் சங்க மாவட்டச் செயலா் சிவஞானம், ராமநாதன், மின்வாரிய ஓய்வூதியா் நலச் சங்கத்தின் ராஜசேகா், அரசு ஊழியா் சங்கத்தின் தென்காசி மாவட்டச் செயலா் துரைசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...