நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளியில் பெற்றோா் தின விழா

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 33ஆவது பெற்றோா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 33ஆவது பெற்றோா் தின விழா கொண்டாடப்பட்டது.

தாளாளா் ஆா்ஜெவி. பெல் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா். பள்ளிப் பாடல் குழுவினா் இறைவணக்கப் பாடல் பாடினா்.

பள்ளி முதல்வா் ராபா்ட் பென் ஆண்டறிக்கை வாசித்தாா். இயக்குநா் டாக்டா் ஃபிராம்டன் ரெத்தின பெல் சிறப்பு விருந்தினா்கள் குறித்து அறிமுகவுரையாற்றினாா்.

ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டலச் செயலா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு கல்வி, தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தோருக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா்.

பள்ளி மாணவத் தலைவி ஜெயஸ்ரீ வரவேற்றாா். தலைமையாசிரியா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.