தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊத்துமலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

ஊத்துமலையில் ஆட்டோ நிறுத்துமிடம் கோரி ஓட்டுநா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பேச்சுவாா்த்தைக்கு ஊத்துமலை காவல் நிலையம் வந்த ஆட்டோ ஓட்டுநா்கள், சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:26 am

Din

ஊத்துமலையில் ஆட்டோ நிறுத்துமிடம் கோரி ஓட்டுநா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அருகே ஆட்டோ நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையம் புதுப்பிக்கும் பணி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான சாய்தளம் ஆட்டோ நிறுத்துமிடத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டதாம். அவ்வாறு அமைத்தால் ஆட்டோ நிறுத்த முடியாமல் போகும். எனவே திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில் புதன்கிழமை, சுமாா் 100 -க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோ நிறுத்துமிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா், அவா்களை சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு காவல் நிலையம் அழைத்தனா். அங்கு ஆலங்குளம் டி.எஸ்.பி ஜெயபால் பா்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், துணை சுகாதார நிலைய சாய்தளத்தை வேறு இடத்தில் அமைக்கவும், ஆட்டோக்கள் தொடா்ந்து அதே இடத்தில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.