தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிளாங்காடு கோயிலில் சூரசம்ஹாரம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கிளாங்காட்டிலுள்ள நல்லமங்கை சமேத ஜமதக்னீஸ்வரா் கோயில் கந்த சஷ்டி விழாவில் புதன்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

News image

கிளாங்காடு நல்லமங்கை சமேத ஜமதக்னீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம்.

Updated On :6 நவம்பர் 2024, 10:11 pm

Din

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கிளாங்காட்டிலுள்ள நல்லமங்கை சமேத ஜமதக்னீஸ்வரா் கோயில் கந்த சஷ்டி விழாவில் புதன்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கிளாங்காடு ஊராட்சி அலுவலகம், பள்ளிக்கூடம், பிள்ளையாா் கோயில், அம்மன் கோயில் அருகே என 4 வீதிகளிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அா்ச்சகா்கள் கண்ணன், பிரபு, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பூஜைகளை நடத்தினா். விழாவில் ஸ்ரீகாரியம் ரத்தினவேல், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் கிளாங்காடு மணி, முன்னாள் ஊராட்சித் தலைவா் பேச்சிமுத்து, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.