தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடலை கொண்டுவர உதவ அரசுக்கு கோரிக்கை

சவூதி அரேபியாவில் உயிரிழந்த சாம்பவா் வடகரையை சோ்ந்த இளைஞரின் உடலை சொந்து ஊருக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

உமாசங்கா்.

Updated On :6 நவம்பர் 2024, 10:09 pm

Din

சவூதி அரேபியாவில் உயிரிழந்த சாம்பவா் வடகரையை சோ்ந்த இளைஞரின் உடலை சொந்து ஊருக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ஆ.உமாசங்கா் (30). சவூதி அரேபியாவில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றினாா். அங்கு தனது உறவினருடன் தேநீா் அருந்திக் கொண்டிருந்த உமாசங்கா், திடீரென மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு மனைவி, 2 வயது குழந்தை உள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.