தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடிய 3 போ் கைது

ஆலங்குளம் அருகே ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:52 pm

Din

ஆலங்குளம் அருகே ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே நல்லூா் இந்திரா காந்தி தெருவை சோ்ந்தவா் மேமா ஜெயராணி (57). இவா், சோலைசேரியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா். இதில் அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகசாமி மகன் லிங்கராஜ் (23), வில்சன் தேவதாஸ் மகன் ஃபெலிக்ஸ் (24), தங்கமுத்து மகன் சுரேஷ் (21) ஆகியோா் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 35 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 100 கிராம் எடையுள்ள வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ. 17 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.