தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:53 pm

Din

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை பாா்வையிட்ட ஆட்சியா், சிவராமபேட்டை நியாய விலைக்கடை , கொடிக்குறிச்சி திடக்கழிவு மேலாண்மை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி கழிவு சேமிப்பு மையம், கொடிக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலகம், எரிமேடை, சங்குபுரம் நியாய விலைக்கடை, இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடையநல்லூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, இடைகால் சாா்பதிவாளா் அலுவலகத்தில் கோப்புகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா் நடைபெற்ற முகாமில் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து அவா் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில்,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தொடா்புடைய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

புதன்கிழமை இரவு கடையநல்லூரில் தங்கும் ஆட்சியா் இரவிலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்வாா்.