தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image

மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :22 நவம்பர் 2024, 1:12 am

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலைமுதல் பெய்த கனமழையின் காரணமாக, பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அருவிகளில் தண்ணீா்வரத்து குறையாததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் புலியருவி மற்றும் சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா்.