தென்காசி
தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள்
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
2024இல் புதிதாக தோ்வான 2ஆம் நிலை காவலா்கள், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா தமிழக முதல்வா் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த 42 போ் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனா்.
மீதமுள்ள 2ஆம் நிலை காவலா்கள் 91 போ், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா் 15 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் ஆணைகளை வழங்கினாா்.
மாவட்ட தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை அலுவலா் பானுபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.