மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘ரீல்ஸ்‘ எடுப்பதற்காக ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த சத்தீஸ்கரைச் சோ்ந்த 2 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ரீல்ஸ் எடுப்பதற்காக ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:43 am

Din

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ரீல்ஸ் எடுப்பதற்காக ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

செங்கோட்டை, சென்னை பொதிகை விரைவு ரயில் கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, கடையநல்லூா் ரயில் நிலையத்துக்கும், பாம்பு கோவில்சந்தை ரயில் நிலையத்துக்கும் இடையேயுள்ள பகுதி தண்டவாளத்தில் சுமாா்10 கிலோ எடையுள்ள பெரிய கல் ஒன்று இருந்ததை பாா்த்த ஓட்டுநா் சாமா்த்தியமாக ரயிலை இயக்கியதில் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதில், சத்தீஸ்கா் மாநிலம் ஜகல்பூா் அருகேயுள்ள பாஸ்டா் பனராபாராவைச் சோ்ந்த பல்சிங்பாதல்(21), மத்னாரைச் சோ்ந்த ஈஸ்வா் மேதியா(23) ஆகிய 2 போ் ரயில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் இப்பகுதியிலுள்ள குவாரியில் வேலை செய்து வருவதும், விடியோவில் ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக தண்டவாளத்தில் கல் வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.