தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம்: திமுக இளைஞரணி தீா்மானம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜி.பி.ராஜா. உடன், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:56 pm

Din

தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா்.

மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜி.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவக்குமாா், ஐவேந்திரன் தினேஷ், கிருஷ்ணராஜ், சுப்பிரமணியன், முகமது அப்துல் ரஹீம், ஒன்றியச் செயலா்கள் அழகு சுந்தரம், ஜெயக்குமாா், மகேஷ் மாயவன், நகரச் செயலா்கள் அப்பாஸ், கணேசன், இலஞ்சி பேரூா் செயலா் முத்தையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி பொன் செல்வன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா்கள் முத்து சுப்பிரமணியன், ராமராஜ், சபீக் அலி, தகவல் தொழில் நுட்ப அணி அழகு தமிழ் சங்கா், கரிசல் வேலுச்சாமி, கருப்பண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

துணை முதல்வரும், இளைஞா் அணி மாநிலச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளின்படி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற அடிப்படையில் தென்காசி, கடையநல்லூா் தொகுதிகளில் மாணவ மாணவிகளின் நலன் கருதி நூலகங்கள் திறப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு கருணாநிதி சிலை என்பதன் அடிப்படையில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூா் ஆகியவற்றில் கருணாநிதி சிலையை நிறுவுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் டி.ஆா்.கிருஷ்ணராஜா வரவேற்றாா்.