தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கலைத் திருவிழா: அச்சன்புதூா் அரசு தொடக்கப் பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் அச்சன்புதூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் செங்கோட்டை வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:16 pm

Din

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் அச்சன்புதூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் செங்கோட்டை வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

கதை கூறுதல் மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளில் மாணவி திவ்யதா்ஷினி முதலிடம் பெற்றாா்.

பேச்சுப் போட்டி மற்றும் மாறுவேடப் போட்டிகளில் மாணவி ரிஹானா முதலிடம் பெற்றாா். தேசபக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல் போட்டிகளில் ஆகிபா சுல்தானா முதலிடம் பெற்றாா். வண்ணம் தீட்டுதல் போட்டியில் பேபிராஷிகா மூன்றாம் இடம் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தலைமையாசிரியா் ஜோசப் மிக்கேல் அந்தோணி பரிசுகள் வழங்கினாா்.

இதில், பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் தலைவா் சதீஷ் ,ஆசிரியா்கள் ராஜு, பாலகிருஷ்ணன், ஸாலிஹாபானு, மீனா, ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.