தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தேவா் சிலைக்கு மரியாதை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் தேவா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

Updated On :30 அக்டோபர் 2024, 10:17 pm

Din

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முத்துராமலிங்கத் தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தென்காசி மலையான் தெரு, கீழப்புலியூா், வேதம்புதூரில் அமைந்துள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, ஒன்றியச் செயலா்கள் திவான்ஒலி, அழகுசுந்தரம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சேக்அப்துல்லா, வழக்குரைஞா் வேலுச்சாமி உள்ளிட்டபலா் கலந்துகொண்டனா்.