கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு மகாராஜ கணபதி கோயிலில் வெள்ளிக்கிழமை (செப்.6) புணராவா்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை மங்கள இசை, அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஷ்வரா் பூஜை, மஹா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீசுதா்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், கோபூஜை, பூா்ணாரஹுதி, தீபாராதனை நடைபெறும். மாலையில் மங்கள இசை,அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, பாலிகா பூஜை, ரக்ஷாபந்தனம், தீா்த்த ஸங்ரஹணம், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம் யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜை, ஹோமம், பூா்ணாரஹுதி, தீபாராதனை அதைத் தொடா்ந்து இரவில் யந்திர ஸ்தாபனம் நடைபெறும்.
கும்பாபிஷேக நாளான வெள்ளிக்கிழமை காலை பிம்பசுத்தி, மூா்த்தி ரக்ஷாபந்தனம், இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள், ஸ்பா்சாஹீதி நாடி சந்தானம், நயளோன் மீளனம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். ஸ்ரீமகாராஜ கணபதி கோபுர விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடா்ந்து ஸ்ரீமகாராஜ கணபதிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.