ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தென்காசியை அடுத்த மேலமெஞ்ஞானபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

துப்பாக்கி சுடும் போட்டியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:37 am

Din

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தென்காசியை அடுத்த மேலமெஞ்ஞானபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பங்கேற்று, போட்டியைத் தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் மரக்கன்றுகளை நட்டாா்.

தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் செயலா் வேலுசங்கா், தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் செயலா் ஜே.எம். ரஷீத், இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி இயக்குநா் ராம்குமாா், பள்ளி முதல்வா் மோனிகா டிஷோசா, செய்தித் தொடா்பாளா் பாலமுருகன், உடற்கல்வி இயக்குநா் சேவியா் ஆகியோா் பங்கேற்றனா்.

4 நாள்கள் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபா் மாநிலங்களைச் சோ்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

ரகுநாத், ஷாஜி குட்டப்பன், நவநீதகிருஷ்ணன், முகமது ஷமீா் சேட், சமீமா பா்வீன் ஆகியோா் நடுவா்களாக செயல்படுகின்றனா். வென்றோருக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 22) நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை மாவட்ட ரைபிள் கிளப் நிா்வாகிகள் சமீா்சேட், சக்தி மணிகண்டன், முா்ஷித் அகமது ரிஸ்வி, கோமதி, ஊழியா்கள், இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியா்கள் செய்து வருகின்றனா்.