தென்காசி
புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புளியங்குடி ஆா்.கே. தெருவைச் சோ்ந்தவா் சிவபெருமாள் மகன் சிவகுமாா்(30), விவசாயத் தொழிலாளி.
அவா் செவ்வாய்க்கிழமை இரவு தென்காசி, மதுரை சாலையில் புளியங்குடி- சிந்தாமணி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பைக் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்.
புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.