தென்காசி
வாசுதேவநல்லூா் ஸ்ரீராஜ பழனியாண்டவா் கோயிலில் திருவிளக்கு பூஜை
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு ஸ்ரீ ராஜபழனியாண்டவா் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு ஸ்ரீ ராஜபழனியாண்டவா் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பாலச்சந்திர விநாயகா் திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீராஜ பழனியாண்டவா் திருக்கோயிலில் 98 ஆவது ஆண்டு திருவாதிரை குருபூஜை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
இக்கோயிலில் ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும், மாலையில் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்துள்ளனா்.