தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

சுரண்டை நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் செண்பக கால்வாய் ஓடையில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சுரண்டை செண்பக கால்வாயின் குறுக்கே ரூ.39 லட்சம் மதிப்பீடில் பாலம் அமைக்க பூமி பூஜை செய்த சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் உள்ளிட்டோா்.
Updated On :23 ஜனவரி 2025, 12:54 am

Din

சுரண்டை நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் செண்பக கால்வாய் ஓடையில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமதிலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் பூமி பூஜை செய்து திட்டப்பணியை தொடங்கி வைத்தனா்.

இதில், சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள், நகராட்சி பொறியாளா் முகைதீன், சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், துணைத்தலைவா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.