திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவு நீா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:29 am IST

தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய்களில் சிலா் மண்ணைக் கொட்டி அடைத்து வைத்துள்ளனா். இதனால் கழிவுநீா் சாலையில் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, கால்வாய் அடைப்புகளை அகற்றி கழிவுநீா் நிரந்தரமாக செல்ல மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image