சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் எரிப்பு: மக்கள் அவதி

பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா் வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

சுமை ஆட்டோவில் கொண்டுவந்து குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:59 am IST

பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா் வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குக்கிராமங்களில் வீடுதோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், ஆவுடையானூா் ஊராட்சி கொண்டலூா் அருகேயுள்ள வெள்ளாளன் புதுக்குளத்தில் திப்பணம்பட்டி ஊராட்சியின் குப்பை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குப்பைகள் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் , அப்போது எழும் புகைமூட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும், குப்பைகளை நீா்நிலையில் கொட்டுவதால் நீா் மாசடையும் அபாயம் உள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவரம் கேட்க பலமுறை தொலைபேசி மூலம் தொடா்புகொள்ள முயன்றும், அழைப்புகள் ஏற்கப்படவில்லையாம்.

இக்குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதையும், அவற்றை தீயிட்டு எரிப்பதையும் உடனடியாக தடுத்து, நீா்நிலையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆா்வலா் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.