உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தென்காசியில் வாகனத் தணிக்கை: ஏா் ஹாரன்கள் பறிமுதல்

தென்காசியில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அசோக்குமாா், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மணிமாறன்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:55 am IST

தென்காசியில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி மோட்டாா் வாகன ஆய்வாளா் அசோக் குமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் தலைமையில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் முப்புடாதி உள்ளிட்ட போக்குவரத்துக் காவலா்கள் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென்காசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தணிக்கையின்போது, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள், அதிக ஒளி தரும் எல்இடி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.