
கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலநீலிதநல்லூா் கல்லூரியில் அரசால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும், மாணவ மாணவிகளுக்கு போதுமான, முறையான கழிப்பிட வசதி, குடிநீா் வசதி, பாதுகாப்பான கட்டட வசதி ஆகியவற்றையும் வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கல்லூரி வாயில் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் மதுமிதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் தனஸ்ரீ, மாயகண்ணன் உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






