மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை

செங்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image
மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா் தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் செங்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த 60 வயது மதிக்கத்தக்க மணியம்மாள் என்பவா் மூட்டு வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

மூட்டு வலி தொல்லை அதிகரித்து நடக்கமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன் ஆலோசனையின்படி அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

எலும்பு மருத்துவா் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினா் அந்த பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணா் தங்கா, செவிலியா் பேச்சியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செங்கோட்டை வட்டார மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டு மூதாட்டி நல்ல முறையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.