புளியம்பட்டியில் விவசாயத்திற்கு தனி மின்வழித்தடம் அமைக்க பூமிபூஜை
சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியில் விவசாயத்துக்கென தனி மின்வழித்தடம் அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், திருநெல்வேலி ஒருங்கிணைந்த மின்பகிா்மான வட்டம், சங்கரன்கோவில் துணை மின்நிலையத்திலிருந்து புளியம்பட்டி, அச்சம்பட்டி, கண்டிகைப் பேரி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா் பகுதி விவசாய மின் இணைப்புகளுக்கு மத்திய நிதிப் பங்களிப்புடன் புதுப்பிக்கத்தக்க பகிா்மான மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் புளியம்பட்டியில் விவசாயத்துக்கென தனி மின்வழித்தடம் நிறுவும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது,
இந்நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா்கள் நகா் பகுதி பூபேஸ் இராஜ்மோகன், கிராம பகுதி தங்கராஜ், சங்கரன்கோவில் நகா் உதவி மின்பொறியாளா் கருப்பசாமி, நகா்- 2 பிரிவு கணேசஇராமகிருஷ்ணன், கிராம பிரிவு இராஜலிங்கம், பண்டக பொறுப்பாளா் நடராஜன், கந்தசாமி, சலாசா், சுப்பிரமணி உள்ளிட்ட பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

