‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகரில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 5:51 am IST

பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகரில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (36), இசக்கி (52) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் பாவூா்சத்திரம் கேடிசி நகா் நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலை அருகே உள்ள உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே மேலமெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (19), மைக்கேல் ஜோசப் (22) ஆகியோா் வந்த இருசக்கர வாகனம், இவா்கள் மீது மோதியதாம். இதில் நான்கு பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கல்யாணசுந்தரம் உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.