வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சங்கரன்கோவிலில் 19 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’: மாசுக் காட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

சங்கரன்கோவிலில் விதிகளை மீறிச் செயல்பட்ட 19 சாயப்பட்டறைகளுக்கு வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

News image

சாயப்பட்டறைக்கு சீல் வைத்த வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.

Updated On :15 ஜூலை 2026, 2:24 am IST

சங்கரன்கோவிலில் விதிகளை மீறிச் செயல்பட்ட 19 சாயப்பட்டறைகளுக்கு வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை கழிவுநீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனா். நிலத்தடி நீா் மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன. இதுதொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் சாயப்பட்டறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மேற்படி சாய ஆலைகள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்டது தெரியவந்தது. இத்தகைய சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, விதிகளை மீறிச் செயல்பட்ட சாயப்பட்டறைகளுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன.

அதன்தொடா்ச்சியாக சங்கரன்கோவில் வட்டாட்சியா் ஆதிநாராயணன் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினா் 4 குழுக்களாகச் சென்று 19 சாயப்பட்டறைகளை செவ்வாய்க்கிழமை

பூட்டி சீல் வைத்தனா். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.