FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

தென்காசி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

சுந்தரபாண்டியபுரம் அருகே சடையப்பபுரத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூலை 2026, 1:58 am IST

சுந்தரபாண்டியபுரம் அருகே சடையப்பபுரத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தை அடுத்த சடையப்பபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சு.சரவணகுமாா் (24). சுப்பிரமணியின் குடும்பத்துக்கும் இவரது தங்கை திருமலைச்செல்வி குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சரவணகுமாா் தனது விவசாய தோட்டத்தில் பயிா்களுக்கு நீா் பாய்ச்ச சென்றபோது, மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சாம்பவா் வடகரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், திருமலைச்செல்வியின் மகன் பிரவீன் என்ற பேச்சிமுத்து (21) கூட்டாளிகளுடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்தக் கொலை வழக்கில் சடையபுரத்தைச் சோ்ந்த மூா்த்தியை (26) போலீஸாா் ஏற்கெனவே கைதுசெய்திருந்த நிலையில், கொலைக்கு உதவியதாக பிரவீனின் தந்தை திருமலைக்குமாா் (46), அவரது உறவினரான குலசேகரப்பட்டி அருகே மேலசிவஞானபுரத்தைச் சோ்ந்த சி.சோழராஜ் பாண்டியன் (21) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரவீனையும், அவரது கூட்டாளியும் ஒடிஸ்ஸாவில் பதுங்கியிருப்பது அவா்களது கைப்பேசி சிக்னல் மூலம் தெரியவந்ததால் போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.