தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆம் ஆண்டு நிறைவு திருக்கு விழாவில் 2ஆம் நாளான திங்கள்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.
திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கத்துக்கு இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தாா்.
ஜி.எஸ். விஜயலெட்சுமி, எம்.ஆா். அழகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எல். முரளி வாழ்த்திப் பேசினாா். மலேசியா கோலாலம்பூா் ஹெல்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த செண்பகக்குழல்வாய்மொழி அறிமுகவுரையாற்றினாா்.
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற பொருளில் கடையம் பொன்சக்திகலா, ‘ஆங்கில இலக்கியத்தில் வள்ளுவம்’ என்ற தலைப்பில் ஐந்தருவி சங்கராஸ்ரம அறங்காவலா் குழுத் தலைவா் இரா.கோ. ராசாராம் ஆகியோா் உரையாற்றினா்.
ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், பேராசிரியா் எம். ராமச்சந்திரன், சுப்பையா பாண்டியன், தமிழ்வாணன், சிவ. சதாசிவம், லிங்கராஜ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
ந. கணேஷ்வரி நன்றி கூறினாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.









