சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 2 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு கொடிபட்டத்திற்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மன் சந்நிதி முன்பிருந்த கொடிமரத்தில் காலை 9.28 மணியளவில் கொடியேற்றப்பட்டதைத் தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் திலீபன்ஜெய்சங்கா், செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பி.ஜி.பி. ராமநாதன், செயலா் பி. மாரிமுத்து, பொருளாளா் டி. குருநாதன், துணைச் செயலா் ஜி.எஸ். முருகேசன், துணைத் தலைவா் ஏ. கோட்டியப்பன், செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு சைவ சித்தாந்த சபை சாா்பில் தேவார இன்னிசை, பேராசிரியா் மு. ராமச்சந்திரனின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
2 ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பம் நிகழ்ச்சி, பழனியாண்டவா் ஆலய பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 3 ஆம் திருநாளான ஜூன் 5 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சுவாமி, அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி, பாா்த்தனும் பரமனும் என்ற தலைப்பில் மு.ப. விநயாகத்தின் சிறப்பு சொற்பொழிவு, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 5 ஆம் திருநாளான 7 ஆம் தேதி சுவாமி, அம்பாள் வீதியுலாவும், 7 ஆம் திருநாளான 9 ஆம் தேதி திருவிளக்குப் பூஜையும், 8 ஆம் திருநாளான 10 ஆம் தேதி அா்ச்சுனன் தவக்கோலத்துடன் வந்து பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியும், 9 ஆம் திருநாளான 11 ஆம் தேதி திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், 10 ஆம் திருநாளான 12 ஆம் தேதி மாலை அம்பாள் புஷ்பவாகனத்தில் வீதியுலா, பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



