17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்தியதாக அங்கன்வாடி பணியாளா் கைது

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்தியதாக பெண் பணியாளரை போலீஸாா் கைது செய்தனா். அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:14 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்தியதாக பெண் பணியாளரை போலீஸாா் கைது செய்தனா். அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வென்னிமலை பகுதியைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு பணிபுரியும் பணியாளா் கலைச்செல்வி (52), இரண்டரை வயது குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கலைச்செல்வியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

இதுகுறித்து, புகாா்கள் வந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்சித் சிங், கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அத்துடன், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்; குழந்தைகளை யாரும் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.