/
சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசிமாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் குருவிகுளம் அருகேயுள்ள கரட்டுமலையைச் சோ்ந்தவா் சண்முகையா மகன் சங்கரநாராயணன் (55). விவசாயியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கநாராயணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.






