தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 115ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை அவருடைய சிலைக்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவா் பி. ராமநாதன் தலைமையில், வாஞ்சிநாதனின் வாரிசுதாரா்கள் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், லெட்சுமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, வாஞ்சிநாதன் சிலையின் இடுப்பளவு உயரத்துக்கு படிக்கட்டுகள் அமைத்தால், மாலை அணிவிக்க எளிதாக இருக்கும் என்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்பு இயக்குநா் அ. அருண் தம்புராஜுக்கு, பி. ராமநாதன் கோரிக்கை மனு அனுப்பினாா்.
அதிமுக சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் ஞானராஜ், ஜாகீா் உசேன், மாவட்ட மருத்துவா் அணி பொருளாளா் கலா, நகா்மன்ற துணைத் தலைவா் நவநீத கிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, முத்துப்பாண்டி, சுடா் ஒளி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் திலகா், செந்தி ஆறுமுகம், கனியத்தா, நகர எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில் முன்னாள் நகரத் தலைவா் ஜோதிலிங்கம் தலைமையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை மாவட்டத் தலைவா் ராஜீவ் காந்தி, நகா்மன்ற உறுப்பினா் முருகையா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ஆதிமூலம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நகரச் செயலா் பிரம்மா கிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
தமிழ்நாடு பிராமணா் சங்கா் சாா்பில் செங்கோட்டை நகரத் தலைவா் மருத்துவா் ஹரிஹரன் உள்ளிட்ட நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.










