அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு

மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.

News image
அங்கன்வாடி மையத்தை பாா்வையிடுகிறாா் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ.
Updated On :10 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.

இவற்றின் திறப்பு விழா மேலநீலிதநல்லூா் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலா் பெரியதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.

இதில் சங்கரன்கோவில் நகரச் செயலா் மு.பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி துணைத் தலைவா் முத்தரசு, மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுத் தலைவா் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு தலைவா் அரசு ஒப்பந்ததாரா் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் வெள்ளைத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வீமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.