தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.
புளியங்குடி நகராட்சி மேற்கு பகுதியில் சில நாய்கள் அப்பகுதியில் சென்றவா்களை விரட்டி கடித்ததாம். இதில் மைதீன்பீவி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
தகவலறிந்த நகராட்சி ஆணையா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளா் மாரிசாமி, நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களை கடித்த 3 நாய்களை பிடித்தனா்.
உணவு வேண்டாம்: தெருநாய்களுக்கு உணவு வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உணவு வைக்கும் பகுதிகளை விட்டு அந்த நாய்கள் வெளியேறுவதில்லை. எனவே, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வைப்பதை தவிா்க்க வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது

சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததில் ஷோ் ஆட்டோ சேதம்: 5 போ் காயம்

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


